Saturday, 11 March 2017

1000 வைரக்கற்களை தூளாக்கி பெயிண்டிங் செய்த ரோல்ஸ் ராய்ஸ் கார்!

வைரங்களை தூளாக்கி பெயிண்டிங் செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்


இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ் நிறுவனம் ஆடம்பர கார்கள் தயாரிப்பதில் உலகிலேயே முதன்மையானது. பெரும் பணக்காரர்கள் கூட ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவதை லட்சியமாகவோ, அல்லது கனவாகவோ தான் வைத்திருப்பர். அந்தளவுக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் விலை மதிப்புள்ளவை.

ஆடம்பரத்தை பறைசாற்ற இம்முறை ஒருபடி மேலே சென்றுள்ளது ரோல்ராய்ஸ் நிறுவனம். விலை உயர்ந்த ரோல்ராய்ஸ் கோஸ்ட் மாடல் கார் ஒன்றினை வைரக்கற்கள் கொண்டு பெயிண்டிங் செய்துள்ளது.

ஒரு வைர நகை வாங்கவே நம்மில் பலருக்கு ஒரு ஆயுசு போதாது. ஆனால் இங்கு ஒரு காருக்கு பெயிண்டிங் செய்ய 1,000 வைரக்கல்களை உபயோகித்துள்ளனர் என்பது பிரம்மாண்டத்தின் உச்சமாகவே உள்ளது.இதற்கு முன்னதாக, தங்க முலாம் கொண்டு பெயிண்டிங் செய்துள்ள கார்கள் குறித்து கூட கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் வைரக்கற்கள் கொண்டு பெயிண்டிங் செய்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது ரோல்ராய்ஸ் நிறுவனம்.

வைரங்களை தூளாக்கி பெயிண்டிங் செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்

முதலில், வைரக்கற்களை அரைத்து பெயிண்டிங் செய்வது சாத்தியம் தானா? என்பது குறித்து ரோல்ராய்ஸ் நிறுவனம் இரண்டு மாதங்கள் ஆய்வு செய்துள்ளது. ஏனெனில் வைரக்கற்கள் மிகவும் கடினத்தன்மை வாய்ந்தவை அதனை வெளிப்புறத்தில் பெயிண்டிங் செய்தால் அதை தொடும் போது கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆய்வில் சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதனை உணர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் குழு, இதற்காக சிறந்த 1,000 வைரக்கற்களை தேர்ந்தெடுத்துள்ளது.1,000 வைரக்கற்களையும் மிகவும் நயமாக அரைத்து தூளாக்கியுள்ளனர். இதனை கார் பெயிண்டில் கலந்து மிகவும் பக்குவமான முறையில் பிரத்யேக முறைகள் மூலமாக கோஸ்ட் காருக்கு பெயிண்டிங் செய்துள்ளனர்.


சற்று மங்கிய ஒளியில் சாதாரணமாக இக்கார் காட்சியளித்தாலும், ஒளி படும் போது மிகவும் பளபளப்பாக ஜொலிக்கிறது ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட். இக்காருக்கு ‘எலிகன்ஸ்' என சிறப்பு பெயர் வைத்துள்ளனர். இதனை ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறது ரோல்ஸ்ராய்ஸ்.
வைரங்களை தூளாக்கி பெயிண்டிங் செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்

உலகிலேயே மிகவும் ஆடம்பர கார் பெயிண்டிங்காக இது அமைந்துள்ளது. தனது வாடிக்கையாளர் ஒருவருக்காக மிகவும் பிரத்யேகமாக இக்காருக்கு வைர பெயிண்டிங் செய்துள்ளது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம். எனினும், அந்த வாடிக்கையாளர் குறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.வைரங்களை அரைத்து பெயிண்டிங் செய்தாலும், இதன் பளபளப்பு என்றுமே நிலைத்திருக்கும் என்று ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக பராமரிப்பு முறை எதுவும் தேவைப்படாது எனவும் கூறினர்.ஒரு தங்க நகையை போட்டுக்கொண்டு சாலையில் சென்றாலே நிம்மதியாக செல்ல முடியாத இன்றைய சூழ்நிலையில், 1,000 வைரக்கற்களால் ஆன இந்த காரை பாதுகாக்க இதன் உரிமையாளர் நிச்சயம் மெனக்கெடத்தான் வேண்டும்.











No comments:

Post a Comment