ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 750 சிசி திறனில் மோட்டார் சைக்கிளை தயாரித்து உள்ளது. இது பழையை செய்தி, ஆனால் இதில் புதியது என்னவென்றால் அதற்கான சோதனை ஓட்டம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.நடுத்தர எடை மோட்டார் சைக்கிளை பொறுத்தவரை இந்தியாவில் ராயல் என்ஃபீல்டுதான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் என்றுமே ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளுக்கு ஒரு பெரிய வியாபார வட்டம் உள்ளது.
350சிசி முதல் 500சிசி வரையிலான நடுத்தர எடை மோட்டார் சைக்கிள்களை வெளியிட்ட வந்த ராயல் என்ஃபீல்டுநிறுவனம், 750சிசி திறனில் இயங்கும் மோட்டார் சைக்கிளை தயாரிக்கவுள்ளதாக அறிவித்து, அதற்கான முதற்கட்ட வேலைகளில் இறங்கியது.
ராயல் என்ஃபீல்டு 750சிசி மோட்டார் சைக்கிளின் தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, அதற்கான சோதனை ஓட்டம் ஸ்பெயின் நாட்டில் முதலாவதாக நடைபெற்றது. அதற்கான புகைப்படங்கள் வெளிவந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் சென்னையில் RE 750சிசி மோட்டார் சைக்கிளின் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. சோதனை ஓட்டம் நடைபெற்றதற்கான புகைப்படங்கள் வெளியாகி, வண்டியின் தோற்றத்தை குறித்த விவாதமும் ஆட்டோமொபைல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.சோதனை ஓட்டத்தை பொறுத்தவரை 750சிசியின் வெளிப்புற அமைப்பு காண்டினென்டல் ஜி.டி. மோட்டார் சைக்கிள் போலதான் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அதனுடைய எஞ்சின் திறனில் தான் குறிப்பிடும்படியான மாற்றங்கள் உள்ளன.
ட்வின் சிலிண்டர் அமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள RE 750சிசி மோட்டார் சைக்கிள் பார்பதற்கு காண்டினென்டல் ஜி.டி வாகனத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. 750சிசியில் இயங்கும் ராயல் என்ஃபீல்ட்டின் புதிய மோட்டார் சைக்கிள், 50 பி.எச்.பி பவர் மற்றும் 60 என்.எம் டார்க் திறனை வழங்கும்.350சிசி, 500சிசி திறன்பெற்ற ராயல் என்ஃபீல்ட்டின் மோட்டார் சைக்கிள்கள் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை இந்தியாவில் விற்பனையில் உள்ளன. இந்தாண்டின் இறுதியில் வெளிவரவுள்ள புதிய 750சிசி மோட்டார் சைக்கிள் விலையை குறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment