தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹுன்டாய், இந்தியாவில் தனக்கென நிலையான ஒரு இடத்தை பெற்றுள்ளது. ஹைபிரிட் கார்களின் முக்கியத்துவம் மற்றும் தேவையை உணர்ந்துள்ள அந்நிறுவனம், அவ்வகை கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.
ஹைபிரிட் கார்கள் எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைப்பு பெற்ற இஞ்சினுடன் வருகிறது. இவை பெட்ரோல் / எலெக்ட்ரிக் என இரட்டை எரிபொருள் கொண்டவையாகும். எரிபொருள் சேமிப்பு, அதிக மைலேஜ் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தைவையாக உள்ள ஹைபிரிட் வகை அடுத்த தலைமுறை வாகன தொழில்நுட்பமாகும்.
அதிகளவில் புகை மாசு ஏற்பட்டு வருவதால், சுற்றுச்சூழலை பேணும் ஹைபிரிட் கார்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு பல்வேறு சலுகைகளையும், ஊக்கத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை அனைத்தையும் உணர்ந்துள்ள ஹுன்டாய் நிறுவனம், புதிய மாடலான ‘இயோனிக்' ஹைபிரிட் கார்களை 2018ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஒரு ‘செமி-ஹைபிரிட்' கார் ஆகும்.‘இயோனிக்' கார்கள் முற்றிலும் வெளிநாட்டில் அசெம்பிள் செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன. இவை டொயோட்டா ‘பிரையஸ்' மாடலுக்கு கடும் போட்டியளிக்கும்.
இது குறித்து ஹுன்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, ஒய்.கே. கூ கூறுகையில், "செமி-ஹைபிரிட் சிஸ்டம் பொருத்தப்பட்ட காம்பாக்ட் மற்றும் எஸ்யுவி கார்கள் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
ஹைபிரிட் கார்களுக்கான கலால் வரி 12.5% என மத்திய அரசு நிர்னயித்துள்ளது, சிறிய கார்களுக்கும் இதே அளவிலான வரிவிதிப்பு தான் என்பது கவனிக்கத்தக்கது. மாற்று எரிபொருள் முறை கொண்ட கார்களை ஊக்குவிக்க இந்த குறைந்த வரிவிதிப்பு முறை பயன்படும். அதே நேரத்தில் கன்வென்ஷனல் மற்றும் எஸ்யுவி கார்களுக்கு 14% முதல் 30% கலால் வரி விதிக்கப்படுகிறது.ஹைபிரிட் கார்களுக்கான கலால் வரி 12.5% என மத்திய அரசு நிர்னயித்துள்ளது, சிறிய கார்களுக்கும் இதே அளவிலான வரிவிதிப்பு தான் என்பது கவனிக்கத்தக்கது. மாற்று எரிபொருள் முறை கொண்ட கார்களை ஊக்குவிக்க இந்த குறைந்த வரிவிதிப்பு முறை பயன்படும். அதே நேரத்தில் கன்வென்ஷனல் மற்றும் எஸ்யுவி கார்களுக்கு 14% முதல் 30% கலால் வரி விதிக்கப்படுகிறது.
ஹைபிரிட் கார்களுக்கான கலால் வரி 12.5% என மத்திய அரசு நிர்னயித்துள்ளது, சிறிய கார்களுக்கும் இதே அளவிலான வரிவிதிப்பு தான் என்பது கவனிக்கத்தக்கது. மாற்று எரிபொருள் முறை கொண்ட கார்களை ஊக்குவிக்க இந்த குறைந்த வரிவிதிப்பு முறை பயன்படும். அதே நேரத்தில் கன்வென்ஷனல் மற்றும் எஸ்யுவி கார்களுக்கு 14% முதல் 30% கலால் வரி விதிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment