Saturday, 11 March 2017

டாடா நிறுவனத்தின் ஜாகுவார் கார் விளம்பரத்துக்கு இங்கிலாந்தில் தடை

ஜாகுவார் கார் விளம்பரத்துக்கு இங்கிலாந்தில் தடை


ஃபோர்டு நிறுவனம் நிர்வகித்து வந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் பிராண்டை டாடா நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டில் கையகப்படுத்தியது நமக்கு தெரிந்த தகவல் தான். ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது டாடா நிறுவனம். 

வணிகத்தில் எந்த ஒரு பொருளுக்கும் விளம்பரம் தேவைப்படும் போது, விலையுயர்ந்த கார்களின் சிறப்புகளை மக்களுக்கு தெரியப்படுத்த விளம்பரம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். ‘ஜாகுவார் எக்ஸ்ஈ' என்ற புதிய காரை இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது டாடா நிறுவனம்.

ஜாகுவார் கார் விளம்பரத்துக்கு இங்கிலாந்தில் தடை



ஜாகுவார் எக்ஸ்ஈ காரில் பல புதிய சிறப்பம்சங்கள் உள்ளது. இதற்காக டாடா நிறுவனம் விளம்பரம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்தில் விளம்பரங்களை கண்கானிக்கும் அமைப்பான ‘அட்வெர்டைசிங் ஸ்டாண்டர்ட்ஸ் ஏஜென்சி' (ASA) புதிய ஜாகுவார் எக்ஸ்ஈ காரின் விளம்பரத்திற்கு தடை விதித்துள்ளது.ஜாகுவார் எக்ஸ்ஈ காரில் உள்ள புதிய அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்தை உபயோகித்து, காரை ஓட்டும் போதே ஓட்டுநர் தனது ஸ்மார்ட் போனை காருடன் இணைத்து அதன் மூலம் தனது குடும்பத்தினருடன் இணையலாம் என்றும், அலுவலக வேலைகளையும் மேற்கொள்ளலாம் எனவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளதால் டாடா நிறுவனத்தின் ஜாகுவார் எக்ஸ்ஈ கார் விளம்பரத்துக்கு அட்வெர்டைசிங் ஸ்டாண்டர்ட்ஸ் ஏஜென்சி அமைப்பு இங்கிலாந்தில் தடை விதித்துள்ளது.விளம்பரத்துக்கான தடை விதிக்கப்பட்டது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், "இங்கிலாந்தின் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விதிகளின்படி ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பும் எந்த ஒரு செயலுக்கும் அனுமதி இல்லை".

"காரை ஓட்டிச்செல்லும் போது அவரசமாக யாருடனும் பேச நேர்ந்தால் கூட வயர்லஸ் ஹெட்செட் கொண்டு மட்டுமே பேசலாம் என்றும் இப்படி ஸ்மார்ட்போனை காருடன் இணைத்து முழுவதுமாக வீடியோ கால் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டால் அது ஓட்டுநரின் கவனத்தை சாலையிலிருந்து திசை திருப்பிவிடும்".இது அனுமதிக்க இயலாத ஒன்று எனவும், டாடா நிறுவனம் வருங்காலங்களில் இதுபோன்ற தொழில்நுட்பங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜாகுவார் கார் விளம்பரத்துக்கு இங்கிலாந்தில் தடை

இது தொடர்பாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எந்த ஒரு கனெண்டட் கார் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கையிலும், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் அது உருவாக்கப்படுகிறது"."ஜாகுவார் எக்ஸ்ஈ காரில் உள்ள குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கும் போதும் பல்வேறுகட்ட சோதனைகள் மேற்கொண்டு தான் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பாது, பாதுகாப்பானது, ஆனாலும், விளம்பரத்துக்கான தடை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.




No comments:

Post a Comment