Saturday, 11 March 2017

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் புதிய விலைப்பட்டியல்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை ஏற்றம்
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரே இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ராயல் என்ஃபீல்டு மட்டுமே. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா போன்ற உலக நாடுகளிலும் தனது மோட்டார்சைக்கிள்களை இந்நிறுவனம் விற்பனை செய்துவருகிறது.
இந்தியாவில் வாகன உற்பத்தியில் கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறைகளின்படி தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களை தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு. இந்த வரிசையில் முதலாவதாக புதிய விதிமுறைகள்படி தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரா350 மோட்டார் சைக்கிள் தற்போது ஷோரூம்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய மோட்டார் விதிமுறைகள்படி தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களில், தற்போது எலெக்ட்ரா350 மோட்டார்சைக்கிள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள்படி தயாரிக்கப்பட்ட இதர மாடல்களையும் சில தினங்களில் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
புதிய விதிமுறைகள்படி தயாரிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மோட்டார்சைக்கிள்களின் விலையையும் சற்று அதிகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.தற்போது வெளிவந்துள்ள புதிய எலெக்ட்ரா 350 மோட்டார் சைக்கிளில் பிஎஸ்-4 சான்று பெற்ற ஒற்றை சிலிண்டர் கொண்ட டிவின் ஸ்பார்க் 346சிசி இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 19.8 பிஹச்பி ஆற்ற்றலையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இதில் 5 ஸ்பீடு மேவல் கியர் பாக்ஸ் உள்ளது.
இந்த பைக்கின் முன்புறத்தில் 280எம் எம் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153எம்எம் டிரம் பிரேக்கும் உள்ளது. இதே போல முன்புறத்தில் டெலஸ்கோபிக் போர்க் சஸ்பென்ஷனும், பின்புறம் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பரும் உள்ளது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை ஏற்றம்
அரசின் புதிய விதிமுறையில் உள்ள பாரத் ஸ்டேஜ்-4 சான்றோடு எப்போதும் ஒளிரும் வகையிலான ஆட்டோமேடிக் ஹெட்லைட்டும் (AHO) இதில் உள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் அளவு 13 லிட்டர். இதன் மொத்த எடை 187 கிலோ.

புதிய விதிமுறைகள்படி தயாரிக்கப்பட்டுள்ளதால் மோட்டார் சைக்கிள்களின் விலையை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சிறிதளவு உயர்த்தியுள்ளது. அதன்படி பைக் மாடல்களின் புதிய விலைப் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இது அனைத்தும் டெல்லி ஆன் ரோடு விலையாகும். 
  • புல்லட் யுசிஇ - ரூ.1.25 லட்சம் 
  • புல்லட் எலெக்ட்ரா - ரூ.1.40 லட்சம் 
  • தண்டர்பேர்டு350 - ரூ.1.61 லட்சம் 
  • தண்டர்பேர்டு500 - ரூ.2.03 லட்சம் 
  • கிளாசிக் 350 - ரூ.1.49 லட்சம் 
  • கிளாசிக் 500 - ரூ.1.90 லட்சம்
  • கிளாசிக் கிரோம் - ரூ.2.01 லட்சம் 
  • புல்லட்500 - ரூ.1.79 லட்சம் 
  • காண்டினெண்டல் ஜிடி - ரூ.2.26 லட்சம் 
  • ஹிமாலயன் - ரூ.1.77 லட்சம் 
  • கிளாசிக் டெசர்ட் ஸ்டார்ம் - ரூ.1.93 லட்சம்

No comments:

Post a Comment