Thursday, 13 April 2017

2017 ஹோண்டா லிவோ பைக் ரூ. 54,331


மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிவோ பைக் அறிமுகம்..!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய லிவோ பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் 110சிசி பைக் செக்மெண்டில் சிறந்து விளங்கும் பைக்குகளில் ஒன்றாக ஹோண்டா லிவோ பைக் இருந்து வருகிறது. நல்ல மைலேஜ் தருவதால் பலதரப்பினராலும் விரும்பப்படும் பைக்காக இது உள்ளது.இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாகன தயாரிப்பில் பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஆக்டிவா ஸ்கூட்டர், சிபி ஷைன் பைக்குகளை தொடர்ந்து லிவோ பைக்கையும் பிஎஸ்4 தரத்தில் மேம்படுத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம்.ஸ்டைலிங், சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜ் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட லிவோ பைக்கில் பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய இஞ்சின், ஆட்டோமேடிக் ஹெட்லைட் மற்றும் சில புதிய அம்சங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.கரடு முரடான பாதைகளில் செல்லும் போதும் மைலேஜை அதிகரிக்க உதவும் வலிமைமிக்க விஷேச டயர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.



பராமரிப்பு தேவைப்படாத ஆற்றல் வாய்ந்த புதிய பேட்டரி மற்றும் முன்பக்க ஆப்ஷனல் டிஸ்க் பிரேக் ஆகியவை புதிய அம்சங்களாக இதில் இடம்பெற்றுள்ளன.மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிவோ பைக்கில் காற்றால் குளிர்விக்கப்படும் 109.19சிசி ஒன்றை சிலிண்டர் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 8.31 பிஹச்பி ஆற்றலையும், 9 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.லிவோ பைக் 2,020மிமீ நீளமும், 738 மிமீ அகலமும், 1099 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 1285 மிமீ ஆக உள்ளது. இதன் எடை 111 கிலோ என்பதால் எளிதான ஹேண்ட்லிங்கை இந்த பைக் அளிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிவோ பைக் அறிமுகம்..!
மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிமோ 6 வண்ணங்களில் கிடைக்கிறது. அவற்றை கீழே உள்ள பட்டியலில் காணுங்கள்..
  • சன்செட் பிரவுன் மெட்டாலிக்
  • அத்லெடிக் பிளூ மெட்டாலிக்
  • கருப்பு
  • பேர்ல் அமேசிங் ஒயிட்
  • இம்பீரியல் ரெட் மெட்டாலிக்
  • மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக்

புதிய ஹோண்டா லிமோ பைக் செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 8.5 லிட்டர்கள் ஆகும்.ஹோண்டா லிமோ பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பெஷன் மற்றும் பின்புறம் 5 வகையில் மாற்றியமைத்துக் கொள்ளும் டூயல் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.லிட்டருக்கு 86 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா லிவோ, டிவிஎஸ் விக்டர், ஹீரோ பாஷன் ப்ரோ, யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் மற்றும் சுசுகி ஹயாடே பைக்குகளுடன் போட்டியில் உள்ளது.புதிய 2017 ஹோண்டா லிவோ பைக்கின் டிரம் பிரேக் வேரியண்ட் ரூ.54,331 என்ற விலையிலும், டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ.56,834 என்ற விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்)முதல்முறையாக 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா லிவோ பைக் அதன் பங்காளியான சிபி டிவிஸ்டர் பைக்கை காட்டிலும் விற்பனையில் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.



டிவிஎஸ் அகுலா 310 படங்கள் வெளியானது


tvs-akula-310 டிவிஎஸ் அகுலா 310 படங்கள் வெளியானது

வருகின்ற ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய டிவிஎஸ் அகுலா 310 ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட பைக் மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள அகுலா 310 மாடல் பிஎம்டபிள்யூ -டிவிஎஸ் கூட்டணியில் உருவாக்கப்பட உள்ள இந்த மாடல் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த பைக் மாடலில் 34 bhp ஆற்றலுடன் , 28Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 313சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட்ட அகுலா 310 கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்ற இந்த பைக்கின் முகப்பில் புராஜெக்டர் முகப்பு விளக்குடன் கூடிய மிக நேர்த்தியான முகப்பில் வின்ட்ஷீல்டு அமைப்பு போன்றவற்றுடன் எல்இடி ரன்னிங் விளக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.


tvs-akula-3101 டிவிஎஸ் அகுலா 310 படங்கள் வெளியானது



முன் மற்றும் பின்புறங்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் முழு டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆப்ஷனை பெற்றதாக விளங்குகின்றது. யூஎஸ்டி ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ரேஸ் சஸ்பென்ஷன் , ரேடியல் காலிப்பர் , ஹை ஸ்டீஃப் ஸ்பேஸ் ஃபிரேம் சேஸீ , டிஜிட்டல் கன்சோல் , ஹீட் மேனேஜ்மென்ட் அமைப்பு , ஆன் போர்டு gyro கேமரா , ஸ்டீயரிங் டேம்பர் போன்றவற்றையும் பெற்றதாக வரவுள்ளது.டிவிஎஸ் அகுலா 310 அல்லது அப்பாச்சி 300 பைக் விலை ரூ. 1.90 லட்சம் விலையில் தொடங்கப்படலாம்.


புதிய இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன்


ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், தனது ஹேட்ச்பேக் மாடலான புதிய இயான் காரில் புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஸ்போர்ட்டி வடிவமைப்பிலும், கூடுதல் வசதிகளுடன் இக்காரை அறிமுகப்படுத்தி உள்ளது ஹூண்டாய் நிறுவனம்.கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாத மத்தியில் இயான் ஹேட்ச்பேக் காரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.2.69 லட்சம் ஆரம்ப விலையில், அசத்தலான புளூயிடிக் வடிவமைப்பில் வந்த இயான், வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. தற்போது வரையிலும் நடுத்தர கார்கள் வரிசையில் முக்கிய இடத்தை இயான் பிடித்துள்ளது.புதிய பாடி மோல்டிங் கிராஃபிக்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் போன் கனெக்ட் வசதியுடன் கூடிய 6.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் கார் அறிமுகமாகியுள்ளது.


ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!


மேலும் கதவின் பேனல்களில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்ட மியூசிக் சிஸ்டம் இதில் தரப்பட்டுள்ளது. ஸ்டீரிங் வீலில் கண்ட்ரோல் பட்டன்கள் பொருத்தப்படாதது குறையாக உள்ளது. மற்றபடி இதன் இண்டீரியர்களில் வேறு எந்த மாற்றமும் இல்லாமல் வெளிவந்துள்ளது ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் கார்.புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 0.8 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 88 பிஹச்பி ஆற்றலையும், 75 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. என்சினின் ஆற்றலை 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பின்சக்கரங்களுக்கு அளிக்கிறது.ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் எரா பிளஸ் மற்றும் மேக்னா பிளஸ் என்ற இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது.ஹுண்டாய் இயான் எரா பிளஸ் ஸ்போர்ட்ஸ் எடிஷன் காரின் சாலிட் கலர் மாடல் ரூ. 3.88 லட்சம் என்ற விலையிலும், மெட்டாலிக் பெயிண்ட் மாடல் ரூ. 3.92 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது.


ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!




இதே போல ஹுண்டாய் இயான் மேக்னா பிளஸ் வேரியண்டின் சாலிட் கலர் மாடல் ரூ. 4.14 லட்சம் என்ற விலையிலும், மெட்டாலிக் பெயிண்ட் மாடல் ரூ. 4.18 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது. (விலை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம்விலை அடிப்படையில் தரப்பட்டுள்ளது.)புதிய ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிசன் கார் போலார் ஒயிட் கலரில் மட்டும் கிடைக்கிறது. வழக்கமான இயான் கார் ஸ்லீக் சில்வர், பிரிஸ்டின் பிளூ ,அற்றும் ரெட் பாஷன் உள்ளிட்ட 3 வண்ணங்களில் கிடைக்கிறது.ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் கார் ரெனால்ட் க்விட் மற்றும் மாருதிசுசுகி ஆல்டோ 800 கார்களுக்கு போட்டியாக களமிறக்கியுள்ளது ஹூண்டாய். லிட்டருக்கு 18 - 20 கிமீ மைலேஜ் தருகிறது இயான்.







Thursday, 6 April 2017

எம்ஃப்ளக்ஸ் மாடல்-1 - எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் பற்றிய தகவல்கள்!

பெட்ரோலில் இயங்கும் சூப்பர் பைக்குகளுக்கு இணையான செயல்திறனை வெளிப்படுத்த வல்ல பேட்டரியில் இயங்கும் புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை எம்ஃப்ளக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்- சிறப்புத் தகவல்கள்!

பெங்களூரை சேரந்த எம்ஃப்ளக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை தயாரித்துள்ளது. இந்தியாவிலேயே தயாரான முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும் இது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.டெல்லி ஐஐடி.,யில் பட்டம் பெற்ற மிட்டல் என்பவரும், இண்டஸ் பிசினஸ் அகாடமியில் பட்டம் பெற்ற அன்கித் கத்ரி என்பவரும் இணைந்து இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கை உருவாக்கும் முயற்சியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் இந்த சூப்பர் பைக்கின் முதல் புரொட்டோடைப் மாடலை காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்- சிறப்புத் தகவல்கள்!


இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கான மின் மோட்டார், டிரான்ஸ்மிஷன் மற்றும் இதர கட்டுப்பாட்டு சாதனங்கள் அனைத்தும் சொந்தமாகவே உருவாக்கி இருக்கின்றன். மிக விரைவாக சார்ஜ் செய்யும் வசதி கொண்ட பேட்டரியும், பேட்டரிக்கான கட்டுப்பாட்டு சாதனங்களையும் கூட எம்ஃப்ளக்ஸ் நிறுவனத்தார் சொந்தமாக உருவாக்கி உள்ளனர்.இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கான சார்ஜர் சர்க்யூட் அமைப்பும், சேஸி, பின் சக்கரங்களை சேஸியுடன் இணைக்கும் ஸ்விங் ஆர்ம், சஸ்பென்ஷன் மற்றும் பாடி பேனல்கள், விளக்குகள் என அனைத்தையும் சொந்தமாக தயாரிக்க உள்ளனர்.பேட்டரியில் இயங்கும் இந்த ஸ்போர்ட்ஸ் பைக் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 170 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இந்த பைக்கின் பேட்டரியை வெறும் 36 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்து விட முடியும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்- சிறப்புத் தகவல்கள்!


எம்ஃப்ளக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கானது மாடல்-1 என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. மொத்தம் 200 பைக்குகளை மட்டும் உற்பத்தி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.எம்ஃப்ளக்ஸ் மாடல்-1 ஸ்போர்ட்ஸ் பைக்கானது ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வெளிவருகிறது. இரண்டாவதாக இந்த நிறுவனம் தயாரிக்க இருக்கும் மாடல்-2 எலக்ட்ரிக் பைக் சற்று விலை குறைவான மாடலாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இரண்டாவது மாடல் கேடிஎம் ட்யூக் போன்று நேக்கட் பாடி ஸ்டைலில் வருகிறது. அதேநேரத்தில், செயல்திறனில் மாடல்-1 அளவுக்கு இருக்குமாம்.இரண்டாவதாக வெளியிடப்பட உள்ள மாடல்-2 பைக் மாடல் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும் ஒரு மாடலிலும், 220 கிமீ தூரம் வரை பயணிக்கும் மற்றொரு மாடலிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.மூன்றாவதாக மாடல்-3 என்ற எலக்ட்ரிக் பைக் மாடலையும் எம்ஃப்ளக்ஸ் நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது. இது மாடல்-1 மாடலைவிட சிறப்பான செயல்திறன் மற்றும் அதிக பயண தூரத்தை வழங்கும் திறன் மிக்க பேட்டரியுடன் தயாரிக்கப்பட உள்ளது.பைக்கை வாங்கும் உரிமையாளர் வீட்டில் ஒரு சார்ஜர் நிறுவப்படும். அதுதவிர, நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பேட்டரியை சார்ஜ் ஏற்றும் நிலையங்களை நிறுவுவதற்கும் எம்ஃப்ளக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

எலக்ட்ரிக் பைக் என்றாலே அதிக தூரம் பயணிக்க முடியாது, செயல்திறன் சிறப்பாக இருக்காது என்ற நிலை இருக்கிறது. இந்த குறைகளை களைந்து சிறப்பான செயல்திறன் மற்றும் அதிக பயண தூரத்தை வழங்கும் எலக்ட்ரிக் பைக் மாடல்களை உருவாக்க எம்ஃப்ளக்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.



மேம்படுத்தப்பட்ட புதிய 2017 யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்

ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம் புதிய விதிமுறையான, பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு சான்று பெற்ற இஞ்சினுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 2017 ஃபேஸினோ ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்

ஏப்ரல் 1 முதல் புதிய பிஎஸ்4 மாசு உமிழ்வு விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளதால், ஃபேஸினோ ஸ்கூட்டரை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது யமஹா நிறுவனம். அதன் அனைத்து ஸ்கூட்டர் மாடல்களும் பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக யமஹா அறிவித்துள்ளது.புதிய கிராஃபிக்ஸில் கவர்ந்திழுக்கும் டிசைன் கொண்ட ஃபேஸினோ ஸ்கூட்டர் தற்போது மேலும் கவர்ச்சிகரமான டூயல் டோன் வண்ணக்கலவையுடன் அறிமுகப்படுத்தப்பட்டு புதிய ஸ்டைலிங்கில் வெளிவந்துள்ளது. இதில் ஆட்டோமேடிக் ஹெட்லைட் உள்ளது.

புதிய கிராஃபிக்ஸ், பிஎஸ்-4 தர இஞ்சின், ஆட்டோமேடிக் ஹெட்லைட், ஸ்டைலிஷ் மீட்டர் கன்சோல், க்ரோம் பினிஷ் செய்யப்பட்ட ரியர் வியூ கண்ணாடிகள் மற்றும் கவர்ச்சிகரமான டூயல் டோன் வண்ண பெயிண்டிங் ஆகிய மாற்றங்களை கண்டுள்ளது புதிய 2017 ஃபேஸினோ.

மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்


யமஹா 2017 ஃபேஸினோவில் காற்றால் குளிர்விக்கப்படும் ஒற்றை சிலிண்டர் கொண்ட 113சிசி எஸ்ஓஹச்சி புளூ கோர் இஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-மில் 7.1 பிஎஸ் ஆற்றலையும், 5,000 ஆர்பிஎம்-மில் 8.1 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

டூயல் டோன் கலர்கள்: 2017 ஃபேஸினோ 6 வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் 4 டூயல் டோன் வண்ணங்கள் மற்றும் இரண்டு சிங்கில் டோன் வண்ணங்களாகும். பிளெண்டிங் பிளூ (Blending blue) ஃபியூஷன் ரெட் ( Fusion Red) யுனைட் ஒயிட் (Unite White) மிங்ளிங் சியான் (Mingling Cyan)

சிங்கில் டோன் கலர்கள்: ஹவுட் ஒயிட் (Haute White) சேசி சியான் (Sassy Cyan) ஏற்கெனவே கிடைத்து வந்த டக்ஸடோ பிளாக், கூல் கோபால்ட் மற்றும் ரஃப் ரெட் ஆகிய வண்ணங்கள் கைவிடப்பட்டுள்ளதாக யமஹா அறிவித்துள்ளது.புதிய ஃபேஸினோ 1815 மிமீ நீளமும், 675 மிமீ அகலமும், 1120 மிமீ உயரமும் கொண்டதாகும். மேலும் இதன் வீல் பேஸ் 2 மிமீ அதிகரிக்கப்பட்டு 130 மிமீ ஆக உள்ளது. இதன் சீட் உயரம் 775 மிமீ ஆக இருப்பதால் எளிதாக ஸ்கூட்டரை ஹேண்டில் செய்யலாம்.பேஸினோவின் பெட்ரோல் டேங்க் 5.2 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். ஃபேஸினோ ஸ்கூட்டர் லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும் என யமஹா நிறுவனம் கூறுகிறது. இதன் எடை 103 கிலோவாகும்.நடப்பு மாடலைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஃபேஸினோவின் விலை 1,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ரூ.54,330 ( எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்ற விலையில் கிடைக்கிறது.

முன்பக்க மற்றும் பின்பக்க பிரேக்குகள் இரண்டும் இணைந்து செயல்படும் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் ஃபேஸினோவில் தரப்படாதது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா 4ஜி மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக ஃபேஸினோ இருப்பது குறிப்பிடத்தக்கது.



ஆடம்பர வசதிகளை பெற்றிருக்கும் ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் நிறுவனம் ஐ20 காரின் மேம்படுத்தப்பட்ட எலைட் ஐ20 மாடலை வெளியிட்டுள்ளது. ஹேட்ச்பேக் வெர்ஷனான எலைட் ஐ20 காரின் உட்புற மற்றும் வெளிப்புற கட்டமைப்பு எல்லாம் தற்போதைய டிரெண்டிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு, மேலும் சில வசதிகளை கூட்டி ஒரு சிறிய அளவிலான ஆடம்பர வாகனமாக ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலை தயாரித்துள்ளது.

இந்தியாவில் எலைட் ஐ20 காரை வெளியிட்டது ஹூண்டாய்


எலைட் ஐ20 மாடல், இரண்டு விதமான வண்ணங்களின் கலவையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நமக்கு நிறைய நிறங்களில் கிடைக்கக்கூடிய அளவில் எலைட் ஐ20 கார் தயாரிக்கப்பட்டுள்ளது. நிறங்களை தேர்ந்தெடுப்பதில் ஹூண்டாய் மேலும் சில கவனங்களை இந்த காரில் செலுத்தி உள்ளது.

இந்தியாவில் எலைட் ஐ20 காரை வெளியிட்டது ஹூண்டாய்

தற்போதைய காலகட்டங்களில் பெரும்பாலும் நீல நிறம் கொண்ட கார்களை அதிகளவில் வாடிக்கையாளர்கள் வாங்குவதாகவும், அதனால் எலைட் ஐ20 காரை நீல நிறத்தில் அதிகமாக தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் எலைட் ஐ20 காரை வெளியிட்டது ஹூண்டாய்


உள்கட்டமைப்பு வசதிகளை குறித்து நாம் பார்த்தோம் என்றால், வெளிப்புறத்தில் என்ன நிறங்கள் இருந்தாலும் உட்புறத்தில் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று ஹூண்டாயின் எதிர்பார்க்கிறது.தொடுதிரை கொண்ட இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் மற்றும் மொபைல் ஃபோன்களை இணைத்துக்கொள்ளும் வசதி என பல்வேறு முக்கிய தொழில்நுட்ப அம்சங்களையும் மேம்படுத்தப்பட்ட எலைட் ஐ20 காரில் ஹூண்டாய் வடிவமைத்துள்ளது.

பழைய ஐ20 மாடல் கார்களிலிருந்த அதே எஞ்சின் தான் இதிலும் உள்ளது. 1.2 பெட்ரோலில் இயங்கும் எலைட் ஐ20 காரின் எஞ்சின் 82 பி.எச்.பி பவர் மற்றும் 115 என்.எம் டார்க் திறனை அளிக்கும். காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் எலைட் ஐ20 காரை வெளியிட்டது ஹூண்டாய்


ஆட்டோமேடட் கியர் பாக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் மாடலிலும் எலைட் ஐ20 கார் கிடைக்கிறது. அதற்கான மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும், அது 99 பி.எச்.பி பவர் மற்றும் 132 என்.எம் டார்க் திறனை வழங்கும்.பெட்ரோல் எஞ்சின் கொண்டு இயங்கும் ஹீண்டாய் எலைட் ஐ20 கார் ரூ.5.56 லட்சத்திலிருந்து, ரூ. 9.09 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படும். மேலும் டீசல் எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் ஹூண்டாய் ஐ20 தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான விலை ரூ.6.61 லட்சத்திலிருந்து ரூ.8.51 லட்சம் வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






நானோ காரை கைவிட டாடா மோட்டார்ஸ் முடிவு!


Related image


இந்தியாவின் முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் அதன் பிரபலமான 4 மாடல் கார்களை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.கமர்ஷியல் வாகனங்கள் முதல் ராணுவ பயன்பாட்டு வாகனங்கள் வரை தயாரித்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 1991ஆம் ஆண்டு முதல் கார் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. உலகிலேயே மலிவான விலை கொண்ட கார் என அடையாளப்படுத்தப்படும் நானோ காரை தயாரித்து வாகனச் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது டாடா மோட்டார்ஸ்.

தற்போது 10 மாடல் கார்களை தயாரித்து வரும் இந்நிறுவனம், அதில் 4 மாடல்களை அடுத்த சில ஆண்டுகளில் கைவிடப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, டாடா நானோ, இண்டிகா, இண்டிகோ சிஎஸ் மற்றும் சுமோ கிரேண்டே உள்ளிட்ட மாடல்கள் கைவிடப்பட உள்ளன.டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவின் விருப்பத்தில் உருவான நானோ கார் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியம் அளித்தாலும் உலகின் மலிவு விலை கொண்ட கார் என்ற அந்தஸ்தை இழந்ததால் நானோ காருக்கு ஏற்பட்டிருந்த வரவேற்பும் குறைந்துவிட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.இதுதொடர்பாக டாடா மோட்டார்ஸின் மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் விவேக் ஸ்ரீவத்ஸவா கூறுகையில். "டாடா நிறுவனம் அதன் பிளாட்ஃபார்ம் எண்ணிக்கையை 2021 ஆண்டிற்குள் 6ல் இருந்து 2 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த பிளாட்ஃபார்ம்களில் 10 மாடல் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன"

Image result for tata nano sumo


"2019-20 காலகட்டத்தில் குறைந்தபட்சம் 4 புதிய மாடல்களை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம், இதனால் புதிய மாடல்களுக்கு வழிவிடும் வகையில் தற்போது இருக்கக்கூடிய மாடல்களில் நான்கை கைவிட முடிவு செய்துள்ளோம்" என்றார்."2019-20 காலகட்டத்தில் குறைந்தபட்சம் 4 புதிய மாடல்களை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம், இதனால் புதிய மாடல்களுக்கு வழிவிடும் வகையில் தற்போது இருக்கக்கூடிய மாடல்களில் நான்கை கைவிட முடிவு செய்துள்ளோம்" என்றார்.


மிஸ்திரியின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் ஆகியவை டாடா சன்ஸ் குழுமத்திற்கு அதிருப்தி ஏற்பட்ட காரணத்தினால் நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டாலும் நானோ கார் சரியாக விற்பனை ஆகாததால் அதனை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியதன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு பின்னாள் இருந்த நானோ கார் தற்போது கைவிடப்பட உள்ளது. மேலும் கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவின் பயணிகள் போக்குவரத்து கார்களில் முக்கிய இடம்பெற்றிருந்த சுமோ காரின் வழித்தோன்றலாக இருந்து வரும் சுமோ கிரேண்டே காரும் அடுத்த சில ஆண்டுகளில் கைவிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.