Thursday, 13 April 2017

2017 ஹோண்டா லிவோ பைக் ரூ. 54,331


மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிவோ பைக் அறிமுகம்..!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய லிவோ பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் 110சிசி பைக் செக்மெண்டில் சிறந்து விளங்கும் பைக்குகளில் ஒன்றாக ஹோண்டா லிவோ பைக் இருந்து வருகிறது. நல்ல மைலேஜ் தருவதால் பலதரப்பினராலும் விரும்பப்படும் பைக்காக இது உள்ளது.இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாகன தயாரிப்பில் பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஆக்டிவா ஸ்கூட்டர், சிபி ஷைன் பைக்குகளை தொடர்ந்து லிவோ பைக்கையும் பிஎஸ்4 தரத்தில் மேம்படுத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம்.ஸ்டைலிங், சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜ் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட லிவோ பைக்கில் பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய இஞ்சின், ஆட்டோமேடிக் ஹெட்லைட் மற்றும் சில புதிய அம்சங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.கரடு முரடான பாதைகளில் செல்லும் போதும் மைலேஜை அதிகரிக்க உதவும் வலிமைமிக்க விஷேச டயர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.



பராமரிப்பு தேவைப்படாத ஆற்றல் வாய்ந்த புதிய பேட்டரி மற்றும் முன்பக்க ஆப்ஷனல் டிஸ்க் பிரேக் ஆகியவை புதிய அம்சங்களாக இதில் இடம்பெற்றுள்ளன.மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிவோ பைக்கில் காற்றால் குளிர்விக்கப்படும் 109.19சிசி ஒன்றை சிலிண்டர் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 8.31 பிஹச்பி ஆற்றலையும், 9 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.லிவோ பைக் 2,020மிமீ நீளமும், 738 மிமீ அகலமும், 1099 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 1285 மிமீ ஆக உள்ளது. இதன் எடை 111 கிலோ என்பதால் எளிதான ஹேண்ட்லிங்கை இந்த பைக் அளிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிவோ பைக் அறிமுகம்..!
மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிமோ 6 வண்ணங்களில் கிடைக்கிறது. அவற்றை கீழே உள்ள பட்டியலில் காணுங்கள்..
  • சன்செட் பிரவுன் மெட்டாலிக்
  • அத்லெடிக் பிளூ மெட்டாலிக்
  • கருப்பு
  • பேர்ல் அமேசிங் ஒயிட்
  • இம்பீரியல் ரெட் மெட்டாலிக்
  • மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக்

புதிய ஹோண்டா லிமோ பைக் செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 8.5 லிட்டர்கள் ஆகும்.ஹோண்டா லிமோ பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பெஷன் மற்றும் பின்புறம் 5 வகையில் மாற்றியமைத்துக் கொள்ளும் டூயல் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.லிட்டருக்கு 86 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா லிவோ, டிவிஎஸ் விக்டர், ஹீரோ பாஷன் ப்ரோ, யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் மற்றும் சுசுகி ஹயாடே பைக்குகளுடன் போட்டியில் உள்ளது.புதிய 2017 ஹோண்டா லிவோ பைக்கின் டிரம் பிரேக் வேரியண்ட் ரூ.54,331 என்ற விலையிலும், டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ.56,834 என்ற விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்)முதல்முறையாக 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா லிவோ பைக் அதன் பங்காளியான சிபி டிவிஸ்டர் பைக்கை காட்டிலும் விற்பனையில் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment