Thursday, 13 April 2017

புதிய இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன்


ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், தனது ஹேட்ச்பேக் மாடலான புதிய இயான் காரில் புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஸ்போர்ட்டி வடிவமைப்பிலும், கூடுதல் வசதிகளுடன் இக்காரை அறிமுகப்படுத்தி உள்ளது ஹூண்டாய் நிறுவனம்.கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாத மத்தியில் இயான் ஹேட்ச்பேக் காரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.2.69 லட்சம் ஆரம்ப விலையில், அசத்தலான புளூயிடிக் வடிவமைப்பில் வந்த இயான், வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. தற்போது வரையிலும் நடுத்தர கார்கள் வரிசையில் முக்கிய இடத்தை இயான் பிடித்துள்ளது.புதிய பாடி மோல்டிங் கிராஃபிக்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் போன் கனெக்ட் வசதியுடன் கூடிய 6.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் கார் அறிமுகமாகியுள்ளது.


ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!


மேலும் கதவின் பேனல்களில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்ட மியூசிக் சிஸ்டம் இதில் தரப்பட்டுள்ளது. ஸ்டீரிங் வீலில் கண்ட்ரோல் பட்டன்கள் பொருத்தப்படாதது குறையாக உள்ளது. மற்றபடி இதன் இண்டீரியர்களில் வேறு எந்த மாற்றமும் இல்லாமல் வெளிவந்துள்ளது ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் கார்.புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 0.8 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 88 பிஹச்பி ஆற்றலையும், 75 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. என்சினின் ஆற்றலை 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பின்சக்கரங்களுக்கு அளிக்கிறது.ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் எரா பிளஸ் மற்றும் மேக்னா பிளஸ் என்ற இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது.ஹுண்டாய் இயான் எரா பிளஸ் ஸ்போர்ட்ஸ் எடிஷன் காரின் சாலிட் கலர் மாடல் ரூ. 3.88 லட்சம் என்ற விலையிலும், மெட்டாலிக் பெயிண்ட் மாடல் ரூ. 3.92 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது.


ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!




இதே போல ஹுண்டாய் இயான் மேக்னா பிளஸ் வேரியண்டின் சாலிட் கலர் மாடல் ரூ. 4.14 லட்சம் என்ற விலையிலும், மெட்டாலிக் பெயிண்ட் மாடல் ரூ. 4.18 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது. (விலை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம்விலை அடிப்படையில் தரப்பட்டுள்ளது.)புதிய ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிசன் கார் போலார் ஒயிட் கலரில் மட்டும் கிடைக்கிறது. வழக்கமான இயான் கார் ஸ்லீக் சில்வர், பிரிஸ்டின் பிளூ ,அற்றும் ரெட் பாஷன் உள்ளிட்ட 3 வண்ணங்களில் கிடைக்கிறது.ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் கார் ரெனால்ட் க்விட் மற்றும் மாருதிசுசுகி ஆல்டோ 800 கார்களுக்கு போட்டியாக களமிறக்கியுள்ளது ஹூண்டாய். லிட்டருக்கு 18 - 20 கிமீ மைலேஜ் தருகிறது இயான்.







No comments:

Post a Comment