பாரத் ஸ்டேஜ் 4 தர எஞ்சினை பெற்ற 2017 ஹோண்டா ஆக்டிவா-i ஸ்கூட்டரில் ஏஹெச்ஓ மற்றும் டூயல் டோன் எனப்படும் இரு வண்ண கலவையிலான நிறத்துடன் ரூ. 50,868 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
2017 ஹோண்டா ஆக்டிவா-i
- ஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள அதே இஞ்சினை ஆக்டிவா ஐ பெற்றுள்ளது.
- ஏஹெச்ஒ உள்பட இருவண்ண கலவை நிறங்களை பெற்றுள்ளது.
- 5 விதமான நிறங்களில் ஆக்டிவா ஐ கிடைக்கும்.
- ஆக்டிவா ஐ ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 109.19சிசி எஞ்சின் 7,000 rpm சுழற்சியில் 8 bhp பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்துவதுடன் 5,500 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 8.94 Nm டார்க்கினை வழங்கவல்லதாகும். விமேட்டிக் ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
- இந்த ஸ்கூட்டரில் ட்யூப்லெஸ் டயர், காம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய ஈக்வலைஸர், 18 லிட்டர் இருக்கை அடியில் ஸ்டோரேஜ் வசதி உள்பட மொபைல் சார்ஜிங் சாக்கெட் போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது.
No comments:
Post a Comment