பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கான மார்க்கெட் மெல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. எதிர்காலத்தில் பேட்டரி வாகனங்களே தீர்வாகவும் மாறும் நிலை இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை தயாரிக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில், நம் நாட்டு இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற கேடிஎம் நிறுவனமும் மின்சார பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அண்மையில் பேட்டரியில் இயங்கும் கேடிஎம் ட்யூக் 390 பைக் ஒன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் முந்தைய தலைமுறை மாடலில் பேட்டரியை பொருத்தி, மின் மோட்டாரில் இயங்கும் வகையில் மாற்றங்களை செய்துள்ளனர். மேலும், பேட்டரியில் இயங்கும் கேடிஎம் ட்யூக் 390 பைக் தயாரிப்பு நிலை மாடல் போல் காட்சி அளிக்கிறது.
ஒருவேளை விரைவில் உற்பத்திக்கு கொண்டு செல்லப்பட்டால், அது உடனடியாக இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த மின்சார கேடிஎம் ட்யூக் 390 பைக் பெரும் ஆவலைத் தூண்டுவதாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில்தான் புதிய தலைமுறை கேடிஎம் ட்யூக் 390 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், பேட்டரியில் இயங்கும் மின்சார கேடிஎம் ட்யூக் 390 பைக் முந்தைய தலைமுறை மாடல் என்பதும் ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.
எனினும், சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் புதிய தலைமுறை ட்யூக் 390 பைக்கிற்கு மேம்படுத்தப்பட்டு இந்த மின்சார பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
இந்த மின்சார ட்யூக் 390 பைக்கில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சாதாரண பெட்ரோல் மாடலைப்போன்றே, க்ளட்ச் லிவர் மற்றும் கியர் லிவர்களை கொண்டிருப்பதுதான். அதாவது, வழக்கமான ஓட்டுதல் உணர்வை ஏற்படுத்துவதற்காக இதுபோன்று கொடுக்கப்பட்டு இருக்கலாம். மின்சார பைக் தயாரிப்பு என்பது கேடிஎம் நிறுவனத்துக்கு புதிதல்ல. ஏற்கனவே, இ-எஸ்எம், இ-எக்ஸ்சி உள்ளிட்ட பல மாடல்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், அதன் பிரபலமான ட்யூக் 390 பைக்கில் மின்சார மாடல் என்பதுதன் இப்போது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதற்கு காரணம்.

No comments:
Post a Comment