Tuesday, 2 May 2017

மெர்சிடிஸ் கான்செப்ட் ஏ செடான் அறிமுகம்

மெர்சிடிஸ் கான்செப்ட் ஏ செடான்

  • காம்பேக்ட் ரக செடான் பிரிவில் நவீன வடிவ தாத்பரியங்களை பெற்றதாக விளங்கும்.
  • அடுத்த தலைமுறை மெர்சிடிஸ்  MFA2 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளது.
  • புதிய டிசைன் சாகப்தத்தை கொண்டதாக விளங்கும் என மெர்சிடிஸ் தெரிவிக்கின்றது.

Mercedes-Benz-Concept-A-Sedan

  • நவீன தலைமுறைக்கு ஏற்ற வகையிலான டிசைன் தாத்பரியங்களை பெற்றதாக வரவுள்ள கான்செப்ட் ஏ செடான் காரில் மிக நேர்த்தியான முன்புற அமைப்பில் ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய ஏஎம்ஜி கார்களில் இடம்பெற்றுள்ள கிரில் அமைப்புடன் வந்துள்ளது. இந்த காரின் நீளம் 4,570, அகலம் 1,870மிமீ மற்றும் உயரம் 1,462மிமீ ஆகும்.
    இன்டிரியர் அம்சத்திலும் மிக நேர்த்தியான இருக்கை அமைப்புடன் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் மிகவும் சொகுசான இருக்கைகளை கொண்டதாக வரவுள்ளது.
    எதிர்கால காம்பேக்ட் ரக மாடல்களாக மெர்சிடிஸ் நிறுவனத்தின்  MFA2 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட உள்ள கார்களான B-class, CLA, CLA சூட்டிங் பிரேக் மற்றும் GLA போன்ற கார்களுடன் எதிர்பார்க்கப்படுகின்ற மற்றொரு எஸ்யூவி மாடலான GLB ஆகிய கார்களின் வரிசையில் ஏ கிளாஸ் செடான் மாடலும் இடம்பெற உள்ளது.

No comments:

Post a Comment