Thursday, 11 May 2017

உலகின் நீளமான நெடுஞ்சாலைகளுள் ஒன்றான டிரான்ஸ்

அழகின் உருவான டிரான்ஸ் -சைபீரியன் ஹைவே பற்றி தெரியாத தகவல்கள்..!


உலகின் மிக அழகான சாலையாகவும், கார் ஓட்டுனர்களுக்கு பரவசத்தை வழங்கும் சாலையாகவும் குறிப்பிடப்படும் டிரான்ஸ் - சைபீரியன் ஹைவே பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து காணலாம். 

அழகின் உருவான டிரான்ஸ் -சைபீரியன் ஹைவே பற்றி தெரியாத தகவல்கள்..!


ரஷ்யாவின் பால்டிக் கடலை ஒட்டி அமைந்துள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் துவங்கி சீனா மற்றும் வடகொரியாவை ஒட்டியுள்ள ஜப்பான் கடல் அருகே அமைந்துள்ள விளாடிவோஸ்டாக் நகரில் முடிவடைகிறது இந்த ஹைவே. ரஷ்யாவின் இரு துருவ நகரங்களை இணைக்கும் இந்த நெடுஞ்சாலை டிரான்ஸ் சைபீரியன் ஹைவே என்று அழைக்கப்படுகிறது. டிரான்ஸ் - சைபீரியன் ஹைவேயின் மொத்த நீளம் சுமார் 11,0000 கிலோமீட்டர்கள் ஆகும். 

அழகின் உருவான டிரான்ஸ் -சைபீரியன் ஹைவே பற்றி தெரியாத தகவல்கள்..!

இதில் முழுமையாக பயணிக்க 7 நாட்கள் ஆகும். உலகின் மிகவும் நீளமான நெடுஞ்சாலை என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் ஹைவே-1 சாலையுடன் இது பகிர்ந்துகொள்கிறது. இந்த உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலையானது, 7 துணை சாலைகளை உள்ளடக்கியதாகும். அவை கீழ்க்கண்டவாறு.. 1. எம்-10: ரஷ்யா ஹைவே 2. எம்-5: உரல் ஹைவே 3. எம்-51: பைகல் ஹைவே 4.எம்-53: இர்குட்ஸ்க்  5.எம்-55: சைபீரியா 6.எம்58-ஆமூர் ஹைவே 7.எம்-60:உசுரி ஹைவே இது உலகின் நீண்ட சாலை என்பது மட்டுமல்லாமல் உலகின் தொன்மையான நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகவும் இது விளங்குகிறது. ரஷ்யாவில் ரயில்வே பாதைகள் அமைக்கப்படுவதற்கு முன்னரே இந்த நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. 

அழகின் உருவான டிரான்ஸ் -சைபீரியன் ஹைவே பற்றி தெரியாத தகவல்கள்..!

இதன் தொன்மைக்கு எடுத்துக்காட்டாக 1876ஆம் ஆண்டில் ஜூல்ஸ் வெர்னே என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ‘கொரியர் ஆஃப் தி சிசர்' என்ற நூலில் இந்த சாலை பற்றிய குறிப்பு உள்ளது. 20ம் நூற்றாண்டில் போக்குவரத்து தேவைகள் அபரிமித வளர்ச்சி கண்டதையடுத்து, பொது போக்குவரத்திற்கு பயன்படும் சாலைகளை தரம் உயர்த்தி நெடுஞ்சாலைகளாக மாற்றினர். சில நாடுகள் ராணுவ துருப்புகளையும், வாகனங்களையும் கொண்டு செல்வதற்காகவும் நெடுஞ்சாலைகளை அமைத்தனர். பின்னர், அவை பொது போக்குவரத்திற்கானதாக மாறியது வரலாறு. ரஷ்யாவின் வனப்பான அழகை இந்த சாலையில் பயணிக்கையில் அனுபவிக்க இயலும். காடுகள், பனிபடர்ந்த மலைகள், தட்டையான நிலப்பரப்புகள், பள்ளத்தாக்குகள் ஊடாக இந்த சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் உள்ளடங்கியுள்ள 7 சாலைகளும் ஒவ்வொரு சிறப்புகளை தன்னகத்தே வைத்துள்ளது. டிரான்ஸ் - சைபீரியா நெடுஞ்சாலையின் துவக்கமான எம்-10: ரஷ்யா ஹைவேயானது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் துவங்கி ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வரை 664கிமீ தூரம் நீள்கிறது. இந்த சாலையானது காட்டுப்பகுதிகளையும், சதுப்பு நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. 

அழகின் உருவான டிரான்ஸ் -சைபீரியன் ஹைவே பற்றி தெரியாத தகவல்கள்..!

இதே போன்று இதன் அடுத்த கட்டமான எம்-5: உரல் ஹைவேயானது மாஸ்கோவில் துவங்கி செல்யபின்ஸ்க் நகரம் வரை சுமார் 1891 கிமீ நீளம் கொண்டது. உரல் சாலையில் மலைப்பகுதிகளையும், தட்டையான நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இது சற்று ஆபத்தான பகுதியாகவும் கருதப்படுகிறது. டிரான்ஸ் - சைபீரியா நெடுஞ்சாலையின் அடுத்த கட்டமான இர்திஷ் சாலையானது செல்யபின்ஸ்க் நகரில் துவங்கி நோவோசிபிர்ஸ்க் நகரம் வரை 1528 கிமீ தூரம் கொண்டது. அடுத்தகட்டமாக உள்ள சைபீரிய சாலையானது நோவோசிபிர்ஸ்க் நகரில் துவங்கி இர்குட்ஸ்க் வரை 1860 கிமீ தூரம் கொண்டதாக உள்ளது. 

அழகின் உருவான டிரான்ஸ் -சைபீரியன் ஹைவே பற்றி தெரியாத தகவல்கள்..!

இதேபோன்று அடுத்து உள்ள பைகல் சாலை இர்குட்ஸ்க் நகரில் துவங்கி சீத்தா நகரம் வரை 1113 கிமீ தூரம் நீள்கிறது. இதன் அருகே பைகல் ஏரி இருப்பதால் இந்த சாலைக்கு இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள ஆமூர் சாலை சீத்தாவில் தொடங்கி காபரோவ்ஸ்க் வரை 2100 கிமீ தூரம் கொண்டதாக உள்ளது. டிரான்ஸ் - சைபீரிய நெடுஞ்சாலையின் இறுதிக்கட்டமான உசுரி சாலை காபரோவ்ஸ்க் நகரில் துவங்கி ஜப்பான் கடலை ஒட்டி அமைந்துள்ள விளாடிவோஸ்டாக் நகரில் முடிவடைகிறது. இதன் நீளம் 760 கிமீ. 

அழகின் உருவான டிரான்ஸ் -சைபீரியன் ஹைவே பற்றி தெரியாத தகவல்கள்..!

இவ்வளவு நீளம் கொண்ட சாலை என்றால் விபத்துகள் நடக்காமல் இருக்குமா என்ன? இந்த சாலையில் நித்தம் சாலைவிபத்துகள் நடந்த வண்ணாமாகத்தான் உள்ளது. இந்த நெடுஞ்சாலையானது நிலப்பரப்பில் உலகின் மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றான ரஷ்யாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு வழியாகவும் பயணிக்கிறது என்பது விஷேஷமாக உள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் அழகை ரசித்தவாறே பயணிக்க முடிகிறது.



No comments:

Post a Comment