பிஎஸ் 4 மற்றும் தானாகவே எந்த நேரமும் ஒளிரும் முகப்பு விளக்குடன் கூடிய புதிய ஹோண்டா லிவா பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 8.25 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 110சிசி எஞ்சினை பெற்றுள்ளது.
புதிய ஹோண்டா லிவா பைக்
- 2015 ஆம் ஆண்டு டிவிஸ்டர் பைக்கிற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.
- 8.25 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 110சிசி எச்இடி என்ஜின்
- டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.
பாரத் ஸ்டேஜ் 4 வகை எஞ்சினை பெற்றுள்ள லிவோ பைக்கில் 8.25 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 110சிசி எச்இடி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 8.63 என்எம் ஆகும். இதில் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லிவோ பைக் மைலேஜ் லிட்டருக்கு 74 கிமீ ஆகும்.இரண்டு வேரியண்ட்களில் லிவோ கிடைக்கின்ற நிலையில் 130மிமீ ட்ரம் பிரேக் இரு டயர்களிலும் இடம்பெற்றுள்ளது. மற்றொரு வேரியன்டில் முன்புறத்தில் ஆப்ஷனலாக 240மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பெஷன் மற்றும் பின்புறத்தில் 5 வகையில் மாற்றியமைத்துக் கொள்ளும் இர்ரடை சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. ஹோண்டா லிவோ பைக் ஆனது பிரவுன், கருப்பு, வெள்ளை, கிரே , நீலம் மற்றும் சிவப்பு என 6 வகையான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.
No comments:
Post a Comment